கோவில் கும்பாபிஷேகம் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை
வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோளீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை, 2016 மார்ச், 18ம் தேதி காலை, 9.30 மணிக்கு நடத்த முடிவு செய்துள்ளனர். வெள்ளகோவில் சோளீஸ்வர சுவாமி திருப்பணி கமிட்டி தலைவர் முத்துகுமார் தலைமையில், துணைத்தலைவர் ராஜலிங்கம், அறநிலையத்துறை செயல் அலுவலர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில், இக்கோவிலில், 2 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த எட்டு ஆண்டாக திருப்பணிகள் நடக்கிறது.
ஸ்தபதி சீனிவாசன் தலைமையில், தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை, திருப்பணிக்குழுவினர் ஆய்வு செய்தனர். வரும், 2016 மார்ச், 18ம் தேதி காலை, 9.30 முதல், 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தனர்.லக்கமநாய்க்கன்பட்டி செந்தில் சிவாச்சாரியார், சிவஞான சிவாச்சாரியார், நடராஜ சிவாச்சாரியார், சோமசுந்தர சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், நகர செயலாளர் முத்துகுமார், முன்னாள் திருப்பணி கமிட்டி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.கும்பாபிஷேக தேதி குறிக்கப்பட்டு விட்டதால், பிற பணிகளை விரைந்து முடிக்க யோசனை தெரிவித்துள்ளனர்.