சோளியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்
ADDED :3770 days ago
கரூர்:ஹிந்து சமய அறநிலையத்துறைஇணை கமிஷனர் கல்யாணி, (திருச்சி) உத்தரவுப்படி, கரூர் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் உமா தலைமையில் ஆத்தூர் சோளியம்மன் கோவில் அறங்காவலர்கள் மற்றும் அறங்காவலர்கள் குழு தலைவர் தேர்தல் நடந்தது.அறங்காவலர்களாக முத்துசாமி, சுப்பிரமணியன், நல்லதம்பி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் அறங்காவலர் குழு தலைவராக முத்துசாமி நியமிக்கப்பட்டார். கோவில் வம்சாவழி தர்மகர்த்தா எம்.சுப்பிரமணி, வாங்கப்பாளையம் சுப்பிரமணி, ரவிக்குமார், கோவில் முறை பூசாரி முருகேசன், மற்றும் பலர் பங்கேற்றனர்.