பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமிபூஜை!
ADDED :4095 days ago
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பைரவருக்கு பால், சந்தனம், இளநீர், திருமஞ்சனம், தேன், உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தன. ஏராளமான பெண்கள் வடமாலை சாத்தி தீபம் ஏற்றி வழிபட்டனர்.