ராமானுஜ ரதயாத்திரை
ADDED :3770 days ago
புதுச்சேரி : ராமாநுஜர் பிரபக்தி இயக்கம் சார்பில் ராமானுஜ ரத யாத்திரை நாளை 13ம் தேதி நடக்கிறது. ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு ராமாநுஜனர் பிரபக்தி இயக்கம் சார்பில், ராமாநுஜர் ரத யாத்திரை வழுதாவூர் கலிங்கமலை கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் நடக்கிறது. காலை 7 மணிக்கு நடக்கும் ரத யாத்திரை கலிங்க மலை கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வருகிறது. ஏற்பாடுகளை ராமாநுஜர் பிரபக்தி இயக்க நிர்வாகிகள், முன்னாள் மத்தியமைச்சர் ஜெகத்ரட்சகன் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.