மட்டப்பாறையில் இன்று கும்பாபிஷேகம்!
ADDED :3770 days ago
செஞ்சி: மட்டப்பாறை கெங்கையம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. செஞ்சி தாலுகா, மட்டப்பாறையில் புதிதாக கெங்கையம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, 11:00 மணிக்கு சாமி கரிக்கோல ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை யாகசாலை பிரவேசம், கலச பிரதிஷ்டை மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. இரவு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு, 108 திரவிய ஹோமமும், 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் மகா பூ ர்ணாஹூதியும், கடம் புறப்பாடும் மற்றும் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலையில் சாமி வீதி உலாவும், வாணவேடிக்கையும் நடக்கிறது.