திரு இருதய ஆண்டவர் ஆலயம்:இன்று கொடியேற்றம்!
பெங்களூரு:ரிச்மென்ட் சாலை, திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா, இன்று துவங்குகிறது. இன்று மாலை, 5:30 மணிக்கு என்.பி.சி.எல்.சி., இயக்குனர் அருட்தந்தை சகாயஜான் கொடியேற்றுகிறார். தொடர்ந்து, திருப்பலி நடக்கிறது. நாளை துவங்கி, வரும், 20ம் தேதி வரை நடக்கும் நவநாட்களில், தமிழ், ஆங்கிலம், கன்னட திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. வரும் 21ம் தேதி, திருவிழா நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை, மாலையில் தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலியும்; மாலை, 5:00 மணிக்கு, தேர்பவனியை பங்குதந்தை ஜோசப் சூசைநாதன் துவக்கி வைக்கிறார். தேர் பவனி நிறைவில், நற்கருணை ஆசிர்வாதம் நடக்கிறது.நவநாட்களில் தினமும் மாலை, 5:00 மணிக்கு, ஆலயவளாகத்தில் ஜெபமாலை தேர் பவனி நடக்கும். தினமும் காலை திருப்பலி முடிந்த பின்னரும், மாலையில் திருப்பலிக்கு முன்னரும் பாவசங்கீர்த்தனம் கேட்கப்படும்.