விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி!
ADDED :3869 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி 12.6.15ல் நடந்தது.
கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் கோவிலில் உள்ள 10 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், ஆய்வாளர் சுபத்ரா, கண்காணிப்பாளர் கோவிந்தராஜன், மார்கண்டேயன் தலைமையிலான திரி சாரண இயக்கத்தினர் உட்பட 70 பேர் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அதில், 13.50 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது. மேலும் தங்கம், வெள்ளிப் பொருட்கள் குறித்து
மதிப்பிடப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11 லட்சத்து 95 ஆயிμத்து 251 ரூபாய் காணிக்கைஇருந்தது குறிப்பிடத்தக்கது.