கம்மாபுரம் கோவிலில் தீமிதி திருவிழா!
ADDED :3770 days ago
கம்மாபுரம்: அங்காளம்மன் கோவில், தீ மிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடந்த 1ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தீமிதி உற்சவம் துவங்கியது. தினமும் காலை 8:00
மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு அங்காளம்மன் பிறப்பு, வளர்ப்பு கதைப் பாட்டு நிகழ்ச்சி, இரவு 10:00 மணிக்கு சுவாமி வீதியுலாநடந்தது.
12.6.15 முன்தினம் (10ம் தேதி) காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 5:00 மணி
யளவில், நடந்த தீ மிதிஉற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். (11ம் தேதி) காலை மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.