மந்தையம்மன் கோயில் காளைக்கு அஞ்சலி!
ADDED :3770 days ago
புதுார்: புதுார் பாரத்நகரில் இறந்த மந்தையம்மன் கோயில் காளைக்கு அப்பகுதியினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.இக்கோயில் காளையை 15 ஆண்டுகளாக கிராமத்தினர் வளர்த்து வந்தனர். அலங்காநல்லுார் உட்பட பல்வேறு பகுதி ஜல்லிக்கட்டுகளில் இக்காளை பரிசுகளை வென்றுள்ளது.
12.6.15 முன் தினம் இரவு அழகர்கோவில் ரோட்டில் இக்காளை சென்ற போது லாரி மோதி இறந்தது. லாரி மற்றும் அதன் உரிமையாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாரத்நகர் பகுதியினர் மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இறந்த காளைக்கு அப்பகுதியினர் மஞ்சள் நீராட்டி, ஆராதனைகள் செய்தனர். பின் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.