உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்தியாத்தோப்பு வேம்படி புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

சேத்தியாத்தோப்பு வேம்படி புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்தூர் வேம்படிபுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று (12ம் தேதி) காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் காலயாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. காலை 7:45 மணிக்கு கடம் புறப்பாடாகி, காலை 8:30 மணிக்குவிமானகலசத்திற்குபுனித நீர்ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர் பரிவார தெய்வங்களானவிநாயகர்,முருகன், சப்தகன்னிகள், துர்கையம்மன், நவக்கிரக சன்னதிகளுக்குகும்பாபிஷேகம் தீபாராதனைநடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !