திண்டிவனம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா!
ADDED :3770 days ago
திண்டிவனம்: திண்டிவனம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. திண்டிவனம் திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, கடந்த மே 15ம் தேதி சென்னை ஈஞ்சம்பாக்கம் லதா கதிர்வேல் தலைமையில் மகாபாரத சொற்பொழிவு துவங்கியது.
சொற்பொழிவு வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.பக்கிரிபாளையம் சக்திவேல் நாடக குழுவினரின் மகாபாரத தெருகூத்து நடந்தது. தினமும் இரவில் வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மாலை தீமிதி உற்சவம் நடந்தது.முன்னதாக காலை கோவில் மைதானத்தில் அரவான் கடபலி நிகழ்ச்சியும், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தனர். வரும் 14ம் தேதி தர்மர்பட்டாபிஷேகம் நடக்கிறது.