காட்டுமன்னார்கோவில் முனீஸ்வரன் கோவிலில் கனகாபிஷேகம்!
ADDED :3770 days ago
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார் கோவில் அடுத்த ம.கொளக்குடி ஊராட்சி வெள்ளியங்கால் பாலம் அருகே உள்ள ஊசிமுனீஸ்வரன் கோவிலில் கனகாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு யாகசாலை துவங்கியது. அதனைத் தொடர்ந்து 9:00 மணிக்கு தீபாராதனையும், 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி, 10:30 மணிக்கு கனகாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.