உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடியில் லட்சார்ச்சனை!

குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடியில் லட்சார்ச்சனை!

ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில்
லட்சார்ச்சனை வரும் 21ம் தேதி துவங்குகிறது.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே
உள்ளது, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்; இந்தக் கோவில் குரு பகவானுக்குரிய
தலமாகும்.இந்த ஆண்டு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு, ஜூலை 5ம் தேதி குரு இடம்
பெயர்கிறார். இதையொட்டி, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற
உள்ளன.

குரு பெயர்ச்சி முன்னிட்டு, லட்சார்ச்சனை விழா வரும் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை
நடக்கிறது. குரு பெயர்ச்சிக்கு பின், ஜூலை 9-ம் தேதி முதல் 15ம் தேதி வரை, இரண்டாவது
கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறும்.லட்சார்ச்சனையில், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி,
விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !