உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ்மலை கோவிலில் கும்பாபிஷேகம்!

கீழ்மலை கோவிலில் கும்பாபிஷேகம்!

செஞ்சி: அனந்தபுரம் கீழ்மலை முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
நடந்தது. செஞ்சி தாலுகா அனந்தபுரம் கீழ்மலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் மகா
கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 10ம் தேதி 6 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜையும், முதல் கால யாக பூஜையும் நடந்தது. மாலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.தொடர்ந்து 11ம் தேதி காலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

12.6.15  காலை 6 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் 8 மணிக்கு மகா பூர்ணாüதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !