கூரைப்பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :3772 days ago
ராஜபாளையம்: கூரைப்பிள்ளையார் கோயில் தெரு ராக்காச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக
விழா, ஜூன் 10ல் விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை 6 மணிக்கு தீர்த்த
சங்கிரகணம், திருமுறை பாராயணம் நடந்தன. இரண்டாம்நாளில் காலை வேதபாராயணம்,
வேதிகார்ச்சனை ஹோமம் மாலை மூன்றாம்கால யாகசாலை பூஜை நடந்தன. மூன்றாம்நாள்
ராக்காச்சி அம்மன், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தன.
பிற்பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடந்தது.