கன்னிவாடியில் கோயில் திருவிழா!
ADDED :3773 days ago
கன்னிவாடி: கன்னிவாடி ரெட்டியார்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழா
நடந்தது. கரகம் பாலித்தலுடன் துவங்கிய விழாவில், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஏராளமான
பக்தர்கள், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திகடன்களை செலுத்தினர். மஞ்சள் நீராடலுடன், பூஞ்சோலை புறப்பாடு நடந்தது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.