மேல்நாரியப்பனூரில் இன்று பெரிய தேர்பவனி!
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் திருத்தலத்தில்
பெரிய தேர்பவனி நடக்கிறது.சின்னசேலம் அடுத்த கீழைநாட்டு பதுவா என்றழைக்கப்படும்
மேல்நாரியப்பனூரில் நூற்றாண்டு பெருமை கண்ட புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளது. கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா துவங்கியது.
தொடர்ந்து 12 ம் தேதி வரை காலை, மாலை திருத்தல வழக்கப்படி வழிபாடுகள் நடந்தது. இன்று காலை 7:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை திருப்பலி மற்றும் குணமளிக்கும் வழிபாடு நடக்கிறது. இப்பெருவிழாவில் முக்கிய அம்சமான பெரிய தேர்பவனி சிறப்பு வானவேடிக்கையுடன் இரவு 10:00 மணிக்கு வலம் வருகிறது.பெரிய தேர்பவனியையொட்டி சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்க உள்ளனர். அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள் திருத்தலத்தில் திரளாக பங்கேற்கின்றனர்.