உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு!

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு!

சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் சி.சி."டிவி, கேமரா பொறுத்தி பக்தர்களின்
பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோயில் உள்ளது. வாரந்தோறும் சனியன்று
மாவட்டத்தின் பிற பகுதியிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சுயம்பு
மூலவரை தரிசிக்க வருகின்றனர். சனிதிசை நடப்பவர்கள் கோயிலின் எதிரேயுள்ள சுரபி நதியில் நீராடி எள் விளக்கேற்றினால் சனிப்பார்வையின் உக்கிரம் குறையும் என்பது ஐதீகம். பரிகார தலமாக இருப்பதால் திருவிழா நேரங்களிலும், வார சனிக்கிழமைகளிலும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் சனீஸ்வரன் கோயிலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மெயின் ரோட்டில் நின்று விடுகின்றனர். கோயில் வளாகத்தில் பக்தர்களை ஒழுங்குபடுத்துவது, பக்தர்களுக்கு இடையூறாக உள்ள பிச்சைகாரர்களை அப்புறப்படுத்துவது போன்ற பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை.

கோயில் வளாகத்தில் சி.சி."டிவி, கேமரா பொறுத்தப்படவில்லை. ஆடி சனி வாரத்திருவிழா
துவங்கும் முன் கண்காணிப்பு கேமரா பொறுத்த இந்து சமய அறநிலையத்துறையினர்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !