உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவில்களில் பிரதோஷ விழா!

சிவன் கோவில்களில் பிரதோஷ விழா!

சங்கராபுரம்:சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது.சங்கராபுரம்அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் நாட்டார் ராமலிங்கம் தலைமையில் பிரதோஷ விழா நடந்தது. ரவி குருக்கள், கணபதி முன்னிலையில் பிரதோஷ நாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

மகாதீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் தியாகராஜபுரம், மூக்கனூர், கடுவனார், புத்தூர், பாக்கம், முதல்பாலமேடு சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !