ஆண்டிபட்டி ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :3898 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி குமராபுரம் அருணாசல ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமம், பிரவேசபலி உட்பட பல பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடுடன், மூலவர் அருணாசல ஈஸ்வரர், விநாயகர், பெருமாள், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், நந்தி உட்பட பரிவார தெய்வங்களுக்கும் புண்ணிய நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ரவிநாராயணன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.