மாலை கும்பிடு விழா!
ADDED :4132 days ago
எரியோடு: எரியோடு மணியகாரன்பட்டியில் பாப்பம்மன் கோயிலில் மாலை கும்பிடு விழா நடந்தது. கோயில் தலைக்கட்டு தாரர்கள் பொங்கல் கூடைகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.
அனைவரும் பொங்கல் வைத்து, சவடம்மன், சிக்கம்மன், மாரஜ்ஜியம்மன், தாத்தப்பன் தெய்வங்களுக்கு பொது அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஏற்பாட்டினை பூசாரி சிக்கணகவுடர், பெத்தகாப்பு சக்திவேல், பொறைகெடியகாரர் சிக்கணன், பொதிகாவல்காரர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.