பசுபதீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
ADDED :5239 days ago
கரூர்: கரூர் திருமண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த ஆனி திருமஞ்சன திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கே ற்று, ஸ்வாமியை வழிபட்டனர். கரூர் மட்டுமல்லாது பல மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பசுபதீஸ்வரர் கோவிலில் ஆனி மஞ்சன திருவிழா நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனையுடன் துவங்கியது. மாலை ஆறு மணிக்கு நடராஜர், சிவகாமி அம்மாள், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், அப்பர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. சிவாச்சாரியர்கள் நடராஜன், சோமசுந்தரம், கிருஷ்ணன் ஆகியோர் பூஜை மற்றும் வழிப்பாடு நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனி திருமஞ்சன விழாவையொட்டி நடராஜர் திருவீதி உலா நடந்தது.