உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முட்டகுறிச்சி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முட்டகுறிச்சி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை : இளையான்குடி அருகே முட்டகுறிச்சி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும்10ம் தேதி நடக்கிறது. இன்று காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது. பகல் 12 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 4 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்குகிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெறும். வரும் 10ம் தேதி காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கும். அன்று காலை 8 மணிக்கு கடம் புறப்பாடு, அதை தொடர்ந்து 8.45 மணிக்கு, பத்ரகாளியம்மன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படும். விநாயகர், முருகன், பேச்சியம்மன், பைரவர் மற்றும் நவக்கிரக மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெறும். விழாவையொட்டி, தேவாரம், திருவாசகம், வேதபாராயணம் நடைபெறும். கோபிநாத் சர்மா தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்கின்றனர். இந்து சத்திரிய நாடார் உறவின்முறையினர் ஏற்பாடுகளை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !