சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேர் வெள்ளோட்டம்
ADDED :5239 days ago
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில், 30 லட்ச ரூபாயில் தேர் சீரமைக்கப்பட்டுள்ளது. வரும் 10 ம் தேதி வெள்ளோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை இணைந்து செய்து வருகின்றனர். இடையூறு: அண்ணா நகர், பஸ் ஸ்டாப், சந்தைப்பேட்டை, வடக்குத்தெரு வழி, தேர் வலம் வரும். ஆனால் தற்போதுள்ள சூழலில், பஸ் ஸ்டாப் வரை மட்டுமே தேர் வர இயலும். மற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.