உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஜூலை 10ம் தேதி கும்பாபிஷேக விழா

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஜூலை 10ம் தேதி கும்பாபிஷேக விழா

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்த நெடும்பலம், கோவில் சிங்களாந்தி கைலாசநாதர் கோவிலில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் விழா 10ம் தேதி நடக்கிறது. திருத்துறைப்பூண்டி நெடும்பலம் கோவில் சிங்களாந்தி கிராமத்தில் 13ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னரால் கட்டப்பட்டு வழிப்பட்டு வந்த சிறப்பு மிக்க ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் அர்த்தநாரீஸ்வரருக்கு தனியாக சன்னதி, கற்ப கிரகம், அர்த்த மண்டபம் அமைக்கப்பட்டு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், புதிய விக்ரகங்களுடன் கட்டப்பட்ட கோவில் கும்பாபிஷேகம் விழா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜையும், இன்று ஒன்பதாம் தேதி காலை ஒன்பது மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. நாளை பத்தாம் தேதி காலை ஆறு மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை துவங்கி, எட்டு மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு 8.11க்கு விமான கும்பாபிஷேகமும், 8.30க்கு மூல ஸ்தான கும்பாபிஷேகமும், 9.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. யாகசாலை பூஜைகள் கொற் கை வெங்கடேச சிவம் சிவாச்சாரியார் தலைமையில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் நீதிமணி, ஆய்வாளர் மதியழகன், திருப்பணி பொருப்பாளர்கள் பாலசுப்பரமணியன், சுவாமிநாதன், நடராஜன் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !