ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 10ம் தேதி கும்பாபிஷேக விழா
சேலம்: சேலம் மாவட்டம், கத்திரிப்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா மற்றும் கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது. காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு கரிக்கோலம் கும்பம் பாலித்தல், 8ம் தேதி கோ பூஜை, கும்ப அலங்காரங்கள், வாஸ்துசாந்தி, அங்குராஅர்ப்பணம், மண் எடுத்தல், யாகசாலை ஹோம குண்டங்களுக்கு பூஜை செய்தல், 9ம் தேதி காலை 8 மணிக்கு காலவேள்வி யாகசாலை பூஜை, மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜை, கன்னியாபூஜை, சர்வதேவதா பிரார்த்தனை, இரவு 8 மணிக்கு நவரத்தின ஸ்தாபனம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பூர்ணாவதி நடக்கிறது. 10ம் தேதி காலை 10 மணிக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. அதைத்தொடர்ந்து, மூலஸ்தான கும்பாபிஷேகம், 11 மணிக்கு மகா அபிஷேகம், திருமாங்கல்ய சாத்துப்படி, தீபாராதனை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்துள்ளனர்.