உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேக விழா!

கும்பாபிஷேக விழா!

காரிமங்கலம்: காரிமங்கலம் டவுன், வாணியர் தெருவில் அமைந்துள்ள விநாயகர், வள்ளி,
தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமி மற்றும் அம்பிகேஸ்வரி அம்மன் கோவில்,
கும்பாபிஷேக விழா, கடந்த மாதம், 1ம் தேதி நடந்தது.

இதைதொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்தது. நிறைவு விழாவில் கணபதி ஹோமம், மற்றும் ஸ்வாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மதியம்,
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது.
இதில், ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கவுன்சிலர்
பிரகாஷ், கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !