உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவேரி நகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி!

காவேரி நகர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி!

புதுச்சேரி:காவேரி நகர் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நாளை
நடக்கிறது. ரெட்டியார்பாளையம் காவேரி நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில்
மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று (17ம் தேதி) மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர
பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 108 சங்கு ஸ்தாபனம், முதல் கால பூஜை, தீபாராதனை
நடக்கிறது.

நாளை (18ம் தேதி) காலை 7:30 மணிக்கு 2ம் கால பூஜை ஹோமம், காலை 10:00 மணிக்கு
அம்மனுக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில்
நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !