உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு ஹோமம்!

சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு ஹோமம்!

திருத்தணி: ஆனி மாதம் முதல் நாளை ஒட்டி, சுந்தர விநாயகர் கோவிலில், சிறப்பு ஹோமம்
மற்றும் பூஜைகள், நேற்று நடத்தப்பட்டன.

திருத்தணி, ம.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் நாளில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று, ஆனி மாதம் முதல் நாளை ஒட்டி, அதிகாலை 5:00 மணிக்கு, கோவில்
வளாகத்தில் ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை 6:00 மணிக்கு, மூலவருக்கு வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தன. உற்சவர் விநாயகர் கோவில் வளாகத்தை ஒரு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !