லட்சுமி விநாயகர் கோவில் மண்டல பூஜை!
ADDED :4122 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஜிஞ்சுப்பள்ளி, லட்சுமி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த, ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தில், லட்சுமி விநாயாகர் கோவில்
கும்பாபிஷேக விழா கடந்த, ஏப்ரல், 22ம் தேதி காலை, 9 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, நேற்று மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி, 108 பெண் பக்தர்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர், ஸ்வாமிக்கு பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், தேன், மஞ்சள், சந்தனம், விபூதி அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலையில், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர் கலந்து கொண்டு, சாமி
தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி கருணாகரன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.