வடவெட்டி கோவிலில் அமாவாசை உற்சவம்!
ADDED :3882 days ago
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
செஞ்சி தாலுகா, வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 7 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 9 மணிக்கு சிறப்பு இசைகச்சேரியும், வாணவேடிக்கையும் நடந்தது. இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர்.
அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.