உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி கோவில் திருப்பணி அதிகாரிகள் ஆய்வு!

புதுச்சேரி கோவில் திருப்பணி அதிகாரிகள் ஆய்வு!

புதுச்சேரி: காந்தி வீதி, வரதராஜப்பெருமாள் கோவில் திருப்பணிகளை, அறநிலைய மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள, வரதராஜப் பெருமாள் கோவில் திருப்பணிகள், 2012ம் ஆண்டு துவங்கியது. இதற்காக, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆஞ்நேயர் சன்னதி, ஊஞ்சல் அலங்கார மண்டபம் புதுப்பித்தல், ராமர் சன்னதி மேல்தளம் புதிதாக அமைக்கும் பணிகள் நடந்துள்ளன.

ராஜகோபுரத்திற்கு வண்ணம் பூசும் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இடதுபுற மேல்தளம் அமைக்கும் பணி முடிந்து, மூலவர் சன்னதி புதுப்பிக்கும் பணி துவங்கியது.
கோவில் முழுவதும் மூன்றாம் கட்ட பணிகள் நடப்பதால், அப்பணிகளை அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, நிர்வாக அதிகாரி ராஜசேகரன் ஆய்வு செய்தனர்.அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் கூறுகையில், திருப்பணிகளின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் சில மாதத்தில் திருப்பணிகள் முழுமையாக முடிந்து விடும். கும்பாபிஷேகம் நடத்த தேதி குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். முதல்வரிடம் அனுமதி பெற்று, தேதியை அறிவிப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !