நளன் குளத்தில் சேகரித்த துணிகள் ரூ.25 லட்சத்து 52 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது!
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவானை தரிசிக்க வரும் பக்தர்கள் நளன் குளத்தில் விட்டு செல்லும் துணி ஏலம் ரூ.25 லட்சசத்து 52 ஆயிரம் ஏலம் விடப்பட்டது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவரகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால், நாட்டின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர். தினம் ஆயிரக்கானக்கான பத்தர்களும் சனிக்கிழமைகளில் பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் முன்னதாக நளன் குளத்தில் நீராடிவிட்டு, தங்களுடைய தோஷங்களை நிறைவேற்ற பக்தர்கள் குளிக்கும் அடைகளை குளத்தில் விட்டு செல்கின்றனர்.இதை கோவில் நிர்வாகம் மூலம் துணிகளை ஒவ்வொறு ஆண்டும் ஏலம் விடுவது வழக்கம். இந்தாண்டு கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று முன்தினம் குளத்தில் பக்தர்கள் விடும் துணிகளை ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.25 லட்சத்து 52 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. மேலும் நளம்குளத்தில் பக்தர்கள் உடைக்கு தேங்காய் ஏலம் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ரூ.5 லட்சம் துணி ஏலம் குறைவாக ஏலம் விடப்பட்டது.