குளம்கரை காத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்: ஆக.,27ல் நடக்கிறது!
திருப்புத்தூர்: திருப்புத்தூர், பெரியகண்மாய்கரையில் உள்ள குளம்கரைகாத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம், 100 ஆண்டுக்கு பின் நடந்தது.நேற்று காலை யாகசாலை பூஜைக்கான முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. இக்கோயிலில் 100 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
கோயிலில் ஜெயந்தன் பூஜை அன்று பிடிமண் எடுத்து சித்திரையில் புரவி எடுப்பு நடக்கும். கடந்த 37 ஆண்டாக புரவி எடுப்பு நடக்கவில்லை. கடந்த 1969ல் பராமரிப்பிற்கு பின் திருப்பணி
நடக்கவில்லை. புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவு செய்தனர்.
கடந்த 2014 மார்ச் 17ல் திருப்பணி துவக்கப்பட்டது. கோயிலை புனரமைக்கும் பணிகள் ரூ.70
லட்சத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. கோயில் வாசலில் ரூ.6 லட்சத்தில் புரவிகள், பூரண புஷ்கலா சமேத அய்யனார்,விநாயகர், முருகன், சப்த கன்னிகையர், ஆதம் கள்ளத்தி,பேச்சியம்மன், பெரியகருப்பர், சின்னக்கருப்பர்,ஆஞ்சநேயர் சன்னதிகளின் விமான, ராஜகோபுரம்திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 27 அன்று காலை 9:00 முதல் 10:30க்குள் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜைக்கு முகூர்த்தகால் ஊன்றும் பணி நேற்று நடந்தது.