உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவசு மரம் ஏறும் விழா!

தவசு மரம் ஏறும் விழா!

செஞ்சி: பொன்பத்தி திரவுபதியம்மன் கோவிலில், தவசு மரம் ஏறும் விழா நடந்தது.
செஞ்சி அடுத்த பொன்பத்தி திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவ விழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மகா பாரத சொற்பொழிவு நடக்கிறது.இதன் 16வது நாள் விழாவின் தொடர்ச்சியாக, நேற்று காலை தவசு மரம் ஏறுதல் நடந்தது. இன்று கர்ணன் மோட்சமும், 24ம் தேதி துரியோதனன் படுகளமும், அன்று மாலை தீ மிதி விழா மற்றும் திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !