திருவாசகம் முற்றோதல் விழா!
ADDED :3766 days ago
சேலம்: குமரகுரு சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று திருவாசகம் முற்றோதல் விழா
நடந்தது.
சேலம், அம்மாபேட்டையில், குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், திருவாசகம்
முற்றோதல் நிகழ்ச்சி, ஆண்டு தோறும் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதன்
மூலம், கல்வி செல்வம், மன நிம்மதி உள்ளிட்ட நற்பலன்கள் கிடைக்க பெறலாம் என்பது
ஐதீகம்.அந்த வகையில், நேற்று காலை, 7 மணிக்கு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏலவார் குழலியம்மை மற்றும் சொக்கநாதப் பெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். சிவனடியார்கள், நிர்வாகிகள், பக்தர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.