உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழபுரம் அருள்மொழிநாதர்கோயில் திருவிழா கொடியேற்றம்!

சோழபுரம் அருள்மொழிநாதர்கோயில் திருவிழா கொடியேற்றம்!

சிவகங்கை: சோழபுரம் அறம்வளர்த்த நாயகி அம்பாள், அருள்மொழிநாதர் கோயிலில்
கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் ஆனி திருவிழா துவங்கியது. சிவகங்கை அருகே
சோழபுரத்தில் பழமையான அறம்வளர்த்த நாயகி அம்பாள், அருள்மொழிநாதர் கோயில் உள்ளது.

இங்கு, பிரதோஷத்தன்று சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும். சிவகங்கை மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் சிவனை வழிபட்டு செல்கின்றனர்.

ஆனி திருவிழா: இக்கோயில் ஆனித்திருவிழா நேற்று காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் கொடியேற்றம், காப்பு கட்டுடன் துவங்கியது. கிராம அம்பலம், தலைவர்கள் முன்னிலை வகித்தனர். தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன், பரம்பரை குருக்கள் ஆத்மநாதன் விழா ஏற்பாடுகளை செய்தனர். தினமும் சுவாமி, அம்பாள் காலை, மாலையில் வீதி உலா வருவார்.

8ம் நாளான ஜூன் 28 அன்று சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், ஜூன் 29ல் தேரோட்டம், ஜூன் 30ல் தீர்த்தவாரி உற்சவத்துடன் ஆனி திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !