உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டதேவி கோயில் விழா நடத்த முடிவு!

கண்டதேவி கோயில் விழா நடத்த முடிவு!

தேவகோட்டை: தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா இன்று
கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தேர் புதுப்பிப்பதற்காக பிரிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் தேரோட்டம் இல்லாமல் திருவிழா நடத்தப்படவுள்ளது. கண்டதேவி கோயில் திருவிழா ,மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேவகோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சிதம்பரம் தலைமையில், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோசாலி சுமதா முன்னிலையில் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, டி.எஸ்.பி. கருப்பசாமி, தாசில்தார் ராஜேந்திரன், மண்டல துணை தாசில்தார் தர்மலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாத்துரை, ஜெயசீலன், பகுதி வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், வி.ஏ.ஓ. ஆனிமுத்து,தீயணைப்பு அலுவலர் கருப்பையா, தாஸ்குருக்கள், பங்கேற்றனர். கூட்டத்தில், 10 நாட்கள் திருவிழாவை சிறப்பாக நடத்துவது, திருவிழா தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழக்கம் போல் தேவஸ்தானம் மூலம் திருமுகம் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

கடந்தாண்டைப் போல் இந்தாண்டும் தேவஸ்தானமே கோயில் திருவிழாவை நடத்துவதெனவும், சுவாமி வீதிஉலா செல்ல தேவஸ்தான சிப்பந்திகளை வைத்து நடத்துவதெனவும், சுவாமி தூக்கும் கிராமங்களை சேர்ந்த நாட்டார்கள் ஒருமித்த கருத்துடன் சுவாமியை தூக்க சம்மதம் ஏற்பட்டால் தேவஸ்தானமே தூக்குவது தொடர்பாக முடிவு செய்து கொள்ளலாம். வழக்கம் போல் வருவாய்த்துறை, போலீஸ் துறை, மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் அவர்கள் பணியினை வழக்கம் போல் செய்வதென முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !