சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தரிசனம்!
ADDED :3764 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி இன்று தேரோட்டமும், நாளை தரிசனம் நடக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தேர் திருவிழா இன்று நடக்கிறது. அதனையொட்டி தேர் கட்டும் பணிகள் முடிந்து 5 தேர்கள் தயார் நிலையில் உள்ளன. இன்று தேர் தி ருவிழாவை தொடர்ந்து நாளை தரிசனம் நடக்கிறது. தேர் விழா மற்றும் தரிசனத்தையொட்டி பக்தர்கள் நேற்றிலிருந்தே சிதம்பரத்தில் குவியத் துவங்கினர்.