தூய லூர்து அன்னை ஆலயத்தில் திவ்ய நற்கருணை பவனி!
ADDED :3763 days ago
வில்லியனுார் : வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலயத்தில் திவ்ய நற்கருணை பவனி நடந்தது.மாலை 5:30 மணிக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்ட நற்கருணை பவனி, மாதா கோவில் வீதி, ஒதியம்பட்டு ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. ஆலயத்திற்கு வெளியே, தேர் செல்லும் பாதையில் மூன்று இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு மறையுரை மற்றும் ஆசீர்வாதம் நடைபெற்றது. இதில் வில்லியனுார், ஒதியம்பட்டு, அரியூர், துத்திப்பட்டு போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கு பங்குத்தந்தை ரிச்சர்ட் தலைமை தாங்கினார். பள்ளி முதல் வர் அந்தோணி சாகாயம், உதவி பங்குத் தந்தை சதீஷ்குமார், மைக்கேல், லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேர் பவனி ஏற்பாடுகளை அருட்சகோதரிகள், பங்குப் பேரவை, அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.