உய்யும் வழியாக ஈசன் திருவடியைக் கருதாதவர்களின் நிலைக்கு இரங்குதல்!
ADDED :3819 days ago
வெண்படிவ நீறுஅக்க மணியும் தரிக்கவுள(து)
உரைக்கதிரு நாமம் உளது
வினவவுயர் ஐந்தெழுத் துளதுட் செபிக்கவுள
விரதமெழு மூன்று நோற்க
ஒண்புகழ் பராவிய புராணங்கள் ஈரொன்பது
உபபுரா ணங்கேட் கவுண்(டு)
உயர்பூசை தொண்டுபல முறைபணிதல் தெரிசனைக்கு
உனதுநற் கோயில் உளதாம்
கண்குளிர வேகாண நின்திருப் படிவமும்
கருதவுன் னடிக்க மலமும்
காணியா யுள்ளதிவ் வகையிலொரு செயலையும்
கருதார்உன் அருள்பெ றுவரோ
திண்புவியில் நின்திரு நடங்கண்டு தொழுதிடும்
செல்வர்க்கு முத்தி யருளும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.