சித்ரா தேவி
ADDED :5240 days ago
சித்ரா பவுர்ணமியன்று வணங்க வேண்டிய தெய்வம் சித்ராதேவி. இவன் குபேரனின் மனைவி. லட்சுமிக்குரிய செல்வத்தை குபேரன் பராமரிக்கிறான். உலக உயிர்கள் செய்யும் பாவ, புண்ணியம், முன்வினை பயன்களுக்கு ஏற்ப அதைப் பிரித்துத் தருகிறான். அவ்வாறு தரும்போது, உழைப்பாளிகளுக்கு சற்று அதிகமாகத் தர சிபாரிசு செய்பவள் இவள். எனவே, இவளை சித்ரா பவுர்ணமி நாளில் நெய் தீபமேற்றி வணங்க வேண்டும். இவளை வணங்கினால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.