தீமிதி விழா!
ADDED :3758 days ago
காரைக்கால்: காரைக்கால் கீழகாசாகுடி சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
நடந்தது.காரைக்கால் கீழகாசாகுடி சீதளாதேவி மாரியம்மன் கோவில் விழா கடந்த 1ம் தேதி
பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை, கடம் புறப்பாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சீதளாதேவி மாரியம்மன் தீக்குழி எதிரே எழுந்தருளினார். பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருமுருகன் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.