உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனித் திருமஞ்சன தேரோட்டம் வீதிகளில் பெண்கள் கோலம்!

ஆனித் திருமஞ்சன தேரோட்டம் வீதிகளில் பெண்கள் கோலம்!

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்த நடராஜர்திருத்தேரோட்டத்தின் போது ஓதுவார்கள் திருமுறை பாடிச் சென்றும், பெண்கள் வீதிகளில் கோலம் போடும் நிகழச்சி நடந்தது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நடராஜர் பெருமான் தேரோட்டம் நேற்று காலை 9:20 மணிக்கு துவங்கியது.அப்போது நடராஜர் சுவாமிக்கு சிவனடியார்கள் மற்றும் ஓதுவார்மூர்த்திகள் பன்னிரு திருமுறை பாடியவாறு சென்றனர்.

இதில் உதவி பேராசிரியர் சுந்தர் தீட்சிதர் தலைமையில் ஆசிரியர் பொன்னம்பலம், செல்வ முத்துக்குமரசாமி தேசிகர், ஓதுவார்கள் மதுரை முத்துக்குமரன், கரிவலம் வந்த நல்லூர் சுந்தர், நிருத்தநாதன், வசந்தகுமார், மற்றும் தேவார பாடசாலை மாணவர்கள் தேர் முன் பாடியவாறு சென்றனர். மேலும் சிவனடியார்கள் சங்குஊதியும், தப்பட்டைஅடித்தும்ஆடிப்பாடி சென்றனர். நான்கு வீதிகளிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பெண்கள் வீதிகள் முழுக்க கோலம் போட்டு சுவாமியை வரவேற்று வழிபட்டனர். தேரோட்டத்தையொட்டி நான்கு வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !