உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் தேர் வடம் பிடித்தல் உற்சவம்!

திரவுபதியம்மன் கோவிலில் தேர் வடம் பிடித்தல் உற்சவம்!

செஞ்சி: பொன்பத்தியில் திரவுபதியம்மன் கோவிலில் திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் நடந்தது. செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி திரவுபதிய ம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் செய்தனர். மதியம் 2:00 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து 16வது நாள்  விழாவாக தவசு மரம் ஏறுதலும், மறுநாள் கர்ண மோட்சமும், 23ம் தேதி பகல் 1 மணிக்கு கெங்கையம்மனுக்கு சாகை  வார்த்தலும், மாலை 6 மணிக்கு  செம்பாத்தா, பச்சையம்மன், கிருஷ்ணர், அர்சுனன் மற்றும் திரவுபதியம்மனுக்கு திருத்தேர் வடம் பிடித்தல்  உற்சவமும் நடந்தது. நேற்று பகல் 3  மணிக்கு துரியோதனன் படுகளமும், மாலை 6 மணிக்கு தீ மிதி விழாவும் நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் குல ÷ சகரன், அறங்காவலர் குணசேகரன் மற்றும் உபயதாரர்கள், கிராம பொதுமக்கள் பலர் பங்@கற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !