சென்னை சிவாலயங்களில் ஆனி திருமஞ்சனம்!
ADDED :3755 days ago
சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு சிவாலயங்களில், நேற்று நடராஜருக்கு, ஆனி உத்திர அபிஷேகம் நடந்தது. நடராஜருக்கு, ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் மட்டுமே நடக்கும். அதில், ஆனி மாதம் உத்திர நட்சத்திரமும் ஒன்று. அதன்படி, நேற்று சென்னையில் உள்ள பல்வேறு சிவாலயங்களில், நடராஜருக்கு, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில், ஆனிப் பெருவிழா கடந்த 21ம் தேதி துவங்கி, நாளை வரை நடக்க உள்ளது.விழாவில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு பழம், தயிர், பால், சந்தனம், தேன், பன்னீர், அரிசி மாவு, மஞ்சள் பொடி, விபூதி ஆகிய விசேஷ பொருட்கள் கொண்டு அபிஷேகம், ஆனித் திருமஞ்சனம் நடைபெற்றது. ஒக்கியம் துரைப்பாக்கம், ஆழிகண்டீஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு நேற்று ஆனி உத்திர அபிஷேகம் நடந்தது.