வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம்!
ADDED :3757 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன பெருவிழாவை முன்னிட்டு நடராஜர் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று ஆனி திருமஞ்சன பெருவிழா நடந்தது. இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு விசேஷ யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம்புறப்பாடாகி சுவாமிக்கு சிறப்பு அபி÷ ஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு மூலவர், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சிவகாமசுந்தரியுடன் வீதி யுலா நடந்தது. தொடர்ந்து சுவாமி கோவிலை அடைந்தவுடன், திருவூடல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.