கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்!
ADDED :3869 days ago
விழுப்புரம்: விழுப்பும் சிவன் கோவிலில் ஆனி மாத சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் ஆனி மாத சிறப்பு திரு மஞ்சனம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், தேன், இளநீர், விபூ தி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை வைத்தியநாத குருக்கள் செய்தார்.