செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் ஆனித்திருமஞ்சன வழிபாடு!
ADDED :3757 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் உள்ள நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று அதிகாலை திருவாசகம் முற்றோதல் துவங்கி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பன்னிரு திருமுறை விண்ணத்தி, மலர்களால் அலங்கரித்த நடராஜர், சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர் சாமிகளுக்கு பேரொளி வழிபாடு நடத்தினர். சங்கு, கயிலை வாத்தியம், முழவு, கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்.