வில்லியநல்லூர் சிலந்தியம்மன் கோவிலில் ஜூலை 10ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :5238 days ago
கடலூர் : சிதம்பரம் அடுத்த வில்லியநல்லூர் சிலந்தியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 10ம் தேதி நடக்கிறது. 9ம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை, இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. 10ம் தேதி காலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி, 8 மணிக்கு கலசம் புறப்பாடு நடக்கிறது. 9 மணிக்கு விமானம் மற்றும் பரிவார பூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகினர்.